உடலும் உலோகங்களும்
உடலும் உலோகங்களும்:-
------------------------------------------------
தங்கமும் வைரமும் மனிதனின் குணத்திற்கு ஒப்பானவை என்னும் நடை முறை எப்படி வந்தது. தங்கம் என்பது ஒரு உலோகம் (Metal), உலோகங்களில் மிகப்பெரிய சுயநலவாதி என்று கூட சொல்லலாம், தகரமும் (Tin, Sn) ஒரு உலோகம் தான், இரும்பும் (Fe) ஒரு உலோகம் தான், இவர்கள் மூவருக்கும் ஒரே வித்தியாசம் ப்ரோட்டான், எலெக்ட்ரான், நியூட்ரான் எண்ணிக்கையில் சிறு வித்தியாசம் தான், ஆனால் அவர்களுக்கு (இரும்பு, தகரம்) ஏன் மதிப்பில்லை என்றால் அவர்கள் பொதுநலவாதிகள், தங்கம், தகரம் இரண்டு அணுக்கள் முன்னாடி ஒரு "ஆக்சிஜென்" அணு இரண்டு எலெக்ட்ரான்கள் வேண்டும் என்று வந்து நின்றால், "தகரம்" தன் எலெக்ட்ரானை உடனடியாக குடுத்து விடுவான். அதற்கு பெயர் தான் வேதியலில் "ஆக்சிடேஷன்" (Oxidation) என்பதாகும். இப்போது தங்கம், தகரம் இரண்டு நபர்களும் ஆளுக்கு இரண்டு "எலக்ட்ரான்கள்" குறைபாடோடு இருக்கிறார்கள்.
அதாவது, தங்களிடம் எப்பவும் இருக்கும் எலெக்ட்ரான் எண்ணிக்கையை விட இப்போது இரண்டு குறைவாக உள்ளது (இப்போது அதன் பெயர் "ஐயன்ஸ்" ions) இப்போது அவர்கள் முன்னே எங்கிருந்தோ இரண்டு எலக்ட்ரான்கள் வருகிறது என்றால், தங்கம் உடனடியாக பாய்ந்து சென்று, ஒவ்வொரு அணுவும் தனித்தனியாக இரண்டு எலக்ட்ரான்களை கவ்விக்கொண்டு முழுமை அடைந்து விடுவார்கள். இதற்கு பெயர் தான் பெயர் தான் 'ரெடக்ஷன்' (Reduction) இப்போது எந்த இரண்டு அணுக்களை வைத்தாலும் ஏதோ ஒன்று தான் எலெக்ட்ரான்களை கவ்வி கொள்ளும், மற்றொன்று வேடிக்கை தான் பார்க்கும், இதில் எந்த அனுவுடன் வைத்தாலும் 'தங்க' அணு தான் முதலில் எலக்ட்ரான்களை கவ்வும்.
தங்கம் இல்லாமல் போனால்தான் அடுத்த நபருக்கு வாய்ப்பு அடுத்து யார் என்பதற்கு ஒரு லிஸ்ட் இருக்கிறது அதன் பெயர் தான் "EMF Series"
(கெமிஸ்ட்ரி மக்களுக்கு நன்னா புரியும்),
இப்போ "வைரம்" என்பதை விளக்க இவ்ளோ கஷ்டப்பட தேவையில்லை. நேத்து எரிச்சுப்போட்ட விறகு கரித்துண்டு இல்லன்னா சிகிரட் ஆஷ், என எது எரிந்து போனாலும் மீதமுள்ளதை கொண்டு வந்து உங்களால் முடிந்தவரை நன்றாக அழுத்தி, நிலத்தில் சுமார் நூறு ஐம்பது முதல் நூறு கிலோமீட்டர் ஆழமுள்ள ஒரு குழியை தோண்டி புதைத்து வைத்து விடவும், அடுத்த நாளே தோண்டி எடுத்து பார்த்தால் அது வைரமாக மாறியிருக்கும், கரித்துண்டும் வைரமும் ஒன்று தான், இரண்டும் "கார்பன்" அணுக்களால் ஆனா கூட்டமைப்பு தான், வெவ்வேறு வடிவத்தில் இருப்பதால்,,
(இரண்டுக்கும் 'எலெக்ட்ரான்கள் ஷேரிங்' மட்டும் தான் வித்தியாசாம்), சிம்பிள் ரூல் என்னவென்றால், நீங்கள் கரித்துன்டிற்கு உயர் அழுத்தம் குடுத்தால் அது வைரமாக மாறிவிடும். இரண்டும் "கார்பன்" அணுக்களால் ஆனா கூட்டமைப்பு தான்"
உடலும் உலோகங்களும்
உடலும் உலோகமும் என்றவுடன் உயர்ந்து கொண்டிருக்கும் தங்க விலை நினைவுக்கு வரலாம். அல்லது பெண்களுக்கு வெள்ளிக் கொலுசும், தங்கச் சங்கிலியும் நினைவில் வந்து போகலாம். ஆனால் இன்றைய அறிவியல் உலகம் தங்கத்தையோ வெள்ளியையோ பற்றி சொல்லப்போவதில்லை. நம் உடலில் செம்பு, துத்தநாகம், வெளிமம் எனப்படும் மெக்னீசியம் ஆகிய உலோகங்களின் இருப்பு பற்றியும் அவை நமது உயிர் வாழ்வுக் காலத்தோடு கொண்ட தொடர்பு பற்றியும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை உங்களுக்கு அறியத் தருகிறோம்.
காப்பர் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் செம்பு, சிங்க் என ஆங்கிலத்தில் அறியப்படும் துத்தநாகம், மெக்னீசியம் எனப்படும் வெளிமம் ஆகிய உலோகங்கள் உடலில் இருக்கும் அளவும், புற்று நோய், இதய நோய் இவற்றால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் தொடர்புடையவை என பிரெஞ்சு அறிவியலர்கள் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.
18 வருட காலத்திலான ஆய்வுகளின் படி அதிக அளவில் செம்பு உடலில் இருப்பவர்களின் உயிரிழப்பு விகிதம் அதிகமாகவும், அதிக அளவில் மெக்னீசியம் உடலில் இருப்பவர்களின் உயிரழப்பு விகிதம் குறைவாகவும், குறைந்த அளவு துத்தநாகம் இருப்பது இந்த இரு உலோகங்களின் பாதிப்புகளுக்கு கூடுதலாக துணைபுரிவதாகவும், லில்லி பாஸ்டர் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர். னேத்தாலி லியோன் மற்றும் அவருடைய சகாக்கள் கண்டறிந்துள்ளனர். என்றாலும், இந்த உலோகங்கள் உண்மையிலேயே இத்தகைய விளைவுகளுக்கு காரணிகளா அல்லது இவை வெறுமனே புற்று நோய் மற்றும் இதய நோயை உணர்த்தும் அடையாள அறிகுறிகளா என்பது தெளிவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
நோய் எதிர்ப்புத் தன்மையை உணர்த்தும் விளைவு, வீக்கங்கள் எரிச்சல், பார்க்கின்சன் நோய் அல்செய்மர் எனப்படும் நினைவிழப்பு நோயை தூண்டக்கூடிய ஆக்ஸிடேட்டிவெ ஸ்ட்ரெஸ் பிராண வாயுவிலான ரசாயண மாற்றத்தால் ஏற்படும் அழுத்தம், இவை உட்பட உடலில் நிகழும் பல்வேறு விடயங்களில் இந்த செம்பு, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் ஆகிய உலோகங்கள் பங்கு வகிக்கின்றன என்று எபிடெமியாலஜி என்ற இதழில் டாக்டர் லியானும் அவரது உதவியாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆக இந்த உலோகங்கள் உடலில் இருப்பதன் அளவுக்கும், உயிரிழப்புக்கும் உள்ள தொடர்பை ஆய்வு செய்ய இந்த ஆய்வாளர்கள் 30 முதல் 60 வயது வரையுள்ள 4035 பேரை ஏறக்குறைய 18 வருட காலம் கண்காணித்தனர். ஆய்வுகளின் தொடர்ச்சியில் 339 பேர் உயிரிழந்ததையும், இவர்களில் 176 பேர் புற்று நோயிலும் 56 பேர் இதய நோயிலும் மரணமடைந்ததையும் அவர்கள் பதிவு செய்தனர். இந்த ஆய்வுகளின்படி, உடலில் செம்பு உலோகம் அதிகளவில் இருந்தவர்கள் ஏதாவது காரணத்தால் உயிரிழக்கும் அபாயம் 50 விழுக்காடு கூடுதலாக இருந்ததையும், குறைந்தளவு செம்பு உடலில் உள்ளவர்களை விட புற்று நோயால் உயிரிழக்கும் அபாயம் 40 விழுக்காடு அதிகமாக இருந்ததையும் கண்டறிந்தனர்.
மறுபுறத்தில் கூடுதலாக மெக்னீசிய உலோகம் உடலில் இருந்தவர்கள் 40 முதல் 50 விழுக்காடு குறைவான அபாயம் கொண்டிருந்ததாகவும் கண்டறியப்பட்டது. கூடுதலாக செம்பும், குறைவான துத்த நாகமும் இருந்தால் உயிரிழப்பு அபாயம் கூடுதலானது அவ்வண்ணமே, குறைவான மெக்னீசியமும், குறைவான துத்தநாகமும் இருந்தால் உயிரிழப்பு அபாயம் அதிகமானது.
அதிக அளவு செம்பு இருப்பது, முதுமை, புகைப்பழக்கம், கூடுதல் கொழுப்புச்சத்து (கொலஸ்ட்ரால்) இவற்றோடு தொடர்புடையது என்றும், குறைவான மெக்னீசிய அளவு, முதுமை, கூட்தல் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இவற்றோடு தொடர்புடையதாகவும் டாக்டர் லியானும், அவரது ஆய்வாளர்களும் குறிப்பிட்டனர்.
உடலில் புற்றுநோயை தூண்டிவிடக்கூடிய, செல்களை சீர்குலைக்ககூடிய சீரழிவு ஏற்படுத்தும் ரசாயண மூலங்களை உருவாக்கூடியது இந்த செம்பு உலோகம், அதேவேளை உடலில் வீக்கம் எரிச்சல் இவற்றை குறைவான மெக்னீசிய அளவு ஏற்படுத்தக்கூடியது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
செல்களை குலைக்கும், புற்றுநோயைத் தூண்டும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் எனப்படும் ரசாயண மூலங்களிலிருந்து பாதுகாக்கக்கூடிய குறைவான துத்தநாக அளவு மறுபுறத்தில் நோய் எதிர்ப்புத்தன்மையை பாதிக்கவும் கூடும் எனப்படுகிறது.
இந்த வகையில் குறைவான அளவு துத்தநாகம், செம்பு அதிகமான நிலையிலோ அல்லது மெக்னீசியம் குறைந்த நிலையிலோ பிராணவாயுவிலான ரசாயன மாற்ற சேதம் மற்றும் வீக்கத்துடன் கூடிய எரிச்சல் எதிர்விளைவு ஆகியவற்றை கூட்டாக தூண்டக்கூடிய தன்மை கொண்டதாக டாக்டர் லியோன் குழுவினர் மேலும் கூறியுள்ளனர்.
உங்களுக்கே உங்களை பற்றி தெரியாத சில ரகசியங்கள்..!
நம் தமிழர் தேசம் பல நூற்றாண்டுகளாக செழிப்பான ஒரு நாடு. இங்கே விளையும் வாசனை பொருட்களுக்காகவும், ஆபரணங்களுக்காகவும் பல நாட்டினர் படையெடுத்தனர் என்பது வரலாறு. ஒரு நாட்டை அடிமையாக்கும் மனோபாவத்தில் படைஎடுத்தல் என்பதை தாண்டி ஒரு நாட்டின் வளத்திற்காக படை எடுப்பது என்பது முன்காலத்தில் இந்தியாவில் மட்டுமே புதிய விஷயமாக இருந்தது.
தற்காலத்தில் எண்ணெய் கிணறு என்னும் வளத்திற்காக சில நாடுகளை அடிமைப்படுத்த வல்லரசு நாடுகள் விரும்புகிறதே அது போல பாரதம் பிறருக்கு ஒரு வளமான பூமியாக தெரிந்தது.
தட்பவெப்பம், பயிர்வகைகள், கலாச்சாரம், மெய்ஞான அறிவு மற்றும் பொருளாதாரம் என பல விஷயங்கள் பாரதம் முன்னிலையில் இருந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் மறுக்கமுடியாது. உலக படத்தில் பூமத்திய ரேகை சார்ந்து அருகில் இருக்கும் நிலப்பரப்புகள் கலாச்சரத்தில் பிற பகுதிகளை காட்டிலும் முன்னேறி இருந்தது. உலகவரைபடத்தில் இடமிருந்து வலமாக எடுத்துக்கொண்டால் மெக்சிக்கோ, எகிப்து, அரேபியா, இந்தியா மற்றும் சீனா ஆகியவை கலாச்சார முன்னேற்றம் கொண்ட பிரதேசமாக இருந்தது.
கலாச்சார முன்னேற்றம் என்றவுடன் நவநாகரீக உடை அணிதலையோ, சமைக்கபட்ட பல்வகை உணவுகள் உண்பதையோ நான் இங்கே குறிப்பிடவில்லை. மெய்யறிவுடன் தங்கள் கலாச்சாரத்தை மேம்படுத்தும் தன்மையும், அறிவியல் சார்ந்த பகுத்தறிவு என்பதையே கலாச்சார முன்னேற்றம் என்கிறேன். வேளாண்மை மூலம் தானிய உற்பத்தி, உலோக பயன்பாடு மற்றும் கட்டிடக்கலை ஆகியவை தான் கலாச்சாரத்தின் உண்மையான குறியீடுகள்.
பூமத்திய ரேகை சார்ந்த நிலப்பரப்புகளில் கலாச்சார முன்னேற்றம் இருந்தாலும் அதில் மிக முன்னேறிய கலாச்சாரம் என்பது பாரதத்தில் மட்டுமே இருந்தது. வேளாண்மையில் புதிய நுட்பங்களை கண்டறிந்து பல்வேறு உணவு முறைகளை கண்டறிவது, உலோகப் பயன்பாட்டில் மிகவும் அறிவியல் அறிவுடன் செயல்படுவது என பாரத தேசத்தினர் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தனர்.
உணவு முறையில் சமச்சீர் உணவு முறையும், பல்வேறு உடல் நிலைக்கு ஏற்ப உணவு அமைப்பையும் நம் மக்கள் பின்பற்றிவந்தனர். அதை வேறு ஒரு நாள் விளக்கமாக பார்ப்போம்.
உலோகத்தில் அனைத்து வகையான உலோகமும் நம் மண்ணில் கிடைத்தவண்ணம் இருந்தது. ஒரு உலோகம் நம் உடலில் எத்தகைய மாற்றத்தை விளைவிக்கும் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது.
நம் உடலில் இருக்கும் நாடியின் செயலையும் நவக்கிரகங்களின் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு உலோகத்தை பயன்படுத்துவது என்பதை கண்டறிந்தார்கள். தங்கம், வெள்ளி மற்றும் செம்பு ஆகியவை மட்டுமே ஆபரணமாக பயன்படுத்தக் கூடிய உலோகம் என்பது அவர்களின் கருத்து.
அறிவியல் ரீதியாக மூலக்கூறு அட்டவணையில் அதிக புள்ளிகள் கொண்டது தங்கம் மற்றும் வெள்ளி என்பது அறிந்ததே. தங்கமும் வெள்ளியும் அதிவேக கடத்திகள். ஆற்றலை கடத்தும் திறனில் இவற்றுக்கு தான் முன்னுரிமை. அதற்காக அறிவியல் சார்ந்து பாரதத்தில் பயன்படுத்தினார்கள் என கூறி பாரத கலாச்சாரத்தின் தரத்தை நான் குறைக்க விரும்பவில்லை. பாரத மக்கள் பயன்படுத்தியது அறிவியலையும் தாண்டிய மெய்யறிவு.
நம் கலாச்சாரத்தின் படி எப்படி உலோகங்களை பயன்படுத்தவேண்டும் என பார்ப்போம். உடலில் தங்கத்தை இடுப்புவரை மட்டுமே அணிய வேண்டும். வெள்ளியை இடுப்புக்கு கீழே மட்டுமே அணிய வேண்டும். விரல்களில் வெள்ளி அணியக்கூடாது.
வெள்ளி என்ற உலோகம் சுக்கிரன் என்ற கிரகத்தை குறிக்கிறது. உண்மையில் சுக்கிரன் கிரகத்தில் வெள்ளித் தாதுக்கள் அதிகம். சுக்கிரன் கிரகத்தையே தமிழில் வெள்ளி என்று குறிப்பிடுகிறோம் அல்லவா? சுக்கிரன் காம இச்சைகளை கொடுக்கும் கிரகம். அதனால் வெள்ளி உலோகம் இடுப்பு அரைஞாண் மற்றும் கொலுசு ஆகியவற்றிக்கு பயன்படுத்தினார்கள். இதனால் சன்யாசிகளுக்கு தங்கம் மற்றும் செம்பு உலோகங்கள் பயன்படுத்தினாலும் வெள்ளி பயன்படுத்த பெரும் தடை நம் ஆன்மீகத்தில் உண்டு.
தங்கத்தை சூரியன் என்ற கிரகம் குறிக்கும், இரத்த ஓட்டம் உடல் வெப்பம் ஆகியவை சீராக வைக்கவும் இதய செயல்பாடு மேம்படவும் தங்கம் மிக முக்கிய உலோகமாகும். மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு தங்கம் மிகமுக்கியமானது.
உலோகத்தில் தங்கத்தின் அமைப்பை தெரிந்து கொண்ட நம் முன்னோர்கள் தங்கத்தை அதிகமாக பயன்படுத்தினார்கள். சுரங்கங்களில் தங்கம் அதிகமாக கிடைத்ததும் ஒரு காரணம். மூளை திறன் அதிகரிக்க நம் அரசர்கள் தங்கத்தை தலையில் கிரீடமாக அணிந்தனர். வேறு கலாச்சார நாடுகளில் தங்கத்தை கிரீடமாக அணிவது வழக்கத்தில் இல்லை என்பதை அறிக. செம்பு ஆபரண தங்கத்துடன் கலக்கப்பயன்பட்டதால் செம்பும் அதிகமாக பயன்பட்டது என கூறலாம்.
ஒரு மனித உடலில் தங்கம் முதன் முதலில் தொடர்பு கொள்ளும் நாள் மிக முக்கியமானது. மனித உடலில் இயற்கையாகவே தங்க தாது உண்டு. அத்துடன் தங்க ஆபரணம் இணைந்து உடலின் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் தங்கம் அணிவித்தல் என்பது விழாவாகவே கொண்டாடினார்கள். நாம் இப்பொழுதும் காது குத்தும் வைபவமாக எளிய நிலையில் கொண்டாடுகிறோம்.
நம் உடலில் இடா நாடி மற்றும் பிங்கள நாடிகள் இடவலமாக இருப்பது முன்பு பார்த்தோம். ஆபரணம் அணிவதில் இந்த நாடிகளை சமநிலை ஆக்குவதற்குத்தான் என்பதை அறிந்து கொள்ளவேண்டும். நாடிகள் ஆன்மீக சக்தியை கடத்தும் புள்ளிகள் என்பதால் நாடிகள் இணையும் இடத்தில் ஆபரணம் அணிய வேண்டும்.
மனித உடல் என்பது ஒருவித கட்டமைப்பால் உண்டானது. நாடிகளின் சலனத்தை அவைகள் ஏற்படுத்துகிறது. நம் உடலில் இடப்பக்கம் உள்ள நாடிகள் வலப்பக்க செயலையும், வலபக்க நாடிகள் இடபக்க செயலையும் செய்யும். அதனால் உடலில் நாடிகளின் சமநிலை தவறாமல் இருக்க சம எடை கொண்ட ஆபரணங்களை இருபக்கமும் அணிந்தார்கள். இரண்டாக இருக்கும் உடல் பகுதிகளில் ஒன்றில் மட்டும் ஆபரணம் போடுவதால் நாடி சமநிலை தவறும். உதாரணமாக காது, மூக்கு, கைகள் மற்றும் கால் பகுதியில் ஆபரணம் அணியும் பொழுது இரு உறுப்புகளிலும் அணிய வேண்டும். இரு உறுப்பில் அணியும் ஆபரணம் சமமான எடையுடன் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.
ஆபரணத்தின் இத்தகைய முக்கியத்துவம் உணராமலேயே நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆபரண வடிவமைப்பவர்கள் கூட தங்களின் பாரம்பரிய வடிவமைப்பால் கொலுசு, வளையல் போன்றவற்ற ஒரே எடை மற்றும் வடிவில் தயாரிப்பார்கள். வடிவம் (டிஸைன்) மாறினால் எடையில் வித்தியாசம் ஏற்படும் என்பது ஒரு முக்கிய காரணம். நாடிகளின் சலனம் ஏற்படாமல் சமநிலையில் இருக்கவும், அலங்காரத்திற்காகவும் ஆபரணம் பயன்படுத்தபட்டது.
மனித உடலில் உள்ள தனிமங்கள்
சராசரியாக 70 கிலோகிராம் எடை உள்ள ஒரு மாந்தனின் உடல் எவ்வெவ் தனிமங்களால் எவ்விகிதத்தில் ஆக்கப்பட்டுள்ளது என்று காட்டும் பட்டியல். மாந்தனின் உடலில் எடையளவில் (நிறை அல்லது திணிவு என்றும் கொள்வதுண்டு) 65-90% நீர்தான் (H2O). மீதம் உள்ளதில் மிகப்பெரும்பாலானவை கரிமம் உள்ள கரிமவேதிப் பொருட்களால் ஆனவை. மனித உடலில் 99% ஆறே ஆறு தனிமங்களால் ஆனவையே. அவை ஆக்ஸிஜன், கரிமம், ஹைட்ரஜன், நைட்ரஜன், கால்சியம், பாஸ்பரஸ் ஆகும்.
தனிமம் விழுக்காடு (%)[1] Mass (kg)[2]
ஆக்ஸிஜன் 65 43
கரிமம் 18 16
ஹைட்ரஜன் 10 7
நைட்ரஜன் 3 1.8
கால்சியம் 1.5 1.0
பாஸ்பரஸ் 1 0.780
பொட்டாசியம் 0.25 0.140
கந்தகம் 0.25 0.140
குளோரின் 0.15 0.095
சோடியம் 0.15 0.100
மக்னீசியம் 0.05 0.019
இரும்பு 0.006 0.0042
ஃவுளூரின் 0.0037 0.0026
துத்தநாகம் 0.0032 0.0023
சிலிக்கான் 0.002 0.0010
சிர்க்கோனியம் 0.0006 0.000001
ருபீடியம் 0.00046 0.00068
ஸ்ட்ரோன்ஷியம் 0.00046 0.00032
புரோமின் 0.00029 0.00026
ஈயம் 0.00017 0.00012
நையோபியம் 0.00016 0.0000015
செப்பு 0.0001 0.000072
அலுமினியம் 0.000087 0.000060
காட்மியம் 0.000072 0.000050
போரான் 0.000069 0.000018
சீரியம் 0.000040
பேரியம் 0.000031 0.000022
ஆர்செனிக் 0.000026 0.000007
வனேடியம் 0.000026 0.00000011
வெள்ளீயம் 0.000024 0.000020
பாதரசம் 0.000019 0.000006
செலீனியம் 0.000019 0.000015
மாங்கனீசு 0.000017 0.000012
அயோடின் 0.000016 0.000020
தங்கம் 0.000014 0.0000002
நிக்கல் 0.000014 0.000015
மாலிப்டினம் 0.000013 0.000005
ஜெர்மானியம் 0.000005
டைட்டேனியம் 0.000013 0.000020
டெலூரியம் 0.000012 0.0000007
ஆண்ட்டிமனி 0.000011 0.000002
லித்தியம் 0.0000031 0.000007
குரோமியம் 0.0000024 0.000014
சீசியம் 0.0000021 0.000006
கோபால்ட் 0.0000021 0.000003
வெள்ளி 0.000001 0.000002
லாந்த்தனம் 0.0000008
காலியம் 0.0000007
யுரேனியம் 0.00000013 0.0000001
பெரிலியம் 0.000000005 0.000000036
ரேடியம் 0.00000000000000001
இற்றியம் 0.0000006
பிஸ்மத் 0.0000005
தாலியம் 0.0000005
இண்டியம் 0.0000004
ஸ்காண்டியம் 0.0000002
டாண்ட்டலம் 0.0000002
தோரியம் 0.0000001
சமாரியம் 0.000000050
டங்க்ஸ்டன் 0.000000020
- திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
சித்தர்களின் குரல். Shiva shangar
Comments
Post a Comment